கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கை கோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமம்மெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக் கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும் அணி சேர்த்துக் கொள்.
படம்: மன்மதன் அம்பு
பாடல்: கமல்ஹாசன்
இசை:தேவி ஸ்ரீப்ரசாத்
0 comments:
Post a Comment