20100922

வா வா நிலவப்புடிச்சித்தரவா...

வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா


வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா


வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் 
அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு


வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா


ஆஹா... ஹா ஹா இரவைப்பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்துத் துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே

கனவை நீயும் நம்பாதே கலைந்து போகும் மறவாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் 
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்ததுபோனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு


வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா



பாடியவர்: ராகுல் நம்பியார்
படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்

20100921

இறகைப்போலே ...


இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே

தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்

அநியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுச்சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்ல
ஓ...ஹோ.. ஹோ.. ஹோ
என் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல் வாழ்வில்லை ஓ...ஹோ ஹோ
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ...ஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: யுகபாரதி

20100920

ஒரு வார்த்தை மொழியாலே


ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்
என்னை உருகவைத்தாள்
ஒரு பார்வை வழியாலே என்னை நெருங்கிவிட்டாள்
என்னை நெருங்கிவிட்டாள்

ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலே

சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

ஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்
என்னை நனையவைத்தான்
புயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்

He Stole My Heart
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Little Little Heart

நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கிறேன்
அன்பே உன் காதலாலே

உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கனமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

பாடியவர்கள்: ஷான், மேகா
படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்: நா.முத்துக்குமார்.

20100919

சிங்கம், சிங்கம்....



Everybody Listen Listen Listen
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing. Alright

ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்த எல்லை தாண்டும் காற்றிவன்
காட்டை எறிக்கும் நெருப்பிவன்
கைப் பட்டால் கொதிக்கும் நீர் இவன்

Everybody Listen He Is On A Mission
You Can Never Stop Him
He Is A Human Tornado
Everybody Listen He Has Got The Right Decision
You Cannot Mess With Him Not Even With His Shadow

சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹேய் சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
ஐம் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்

ஹேய் ரௌடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும் இருக்கும்
காவல்துறை தேர்ந்தெடுத்து சிங்கத்தைதான் அனுப்பும் ஜெயிக்கும்
வீரம் அது இதுதானோ
சூரம் இரு விழிதானோ
தீரன் அது இவன்தானோ
மாயவனோ.....

பார்க்கும் அது படித்தானோ
காக்கும் இரு கைதானோ
நீக்கம் தனி வழிதானோ
நிரந்தர பயம் இவனோ......

சிங்கம் சிங்க He is துரை சிங்கம்
இவன் பார்த்தால் போதும் இடியும் இறங்கும்

வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான்
மிக மிகயாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான்
சுத்தம் இரு கைதானோ
ரத்தம் ஒரு மைதானோ
யுத்தம் அது மெய்தானோ
போர்க்களமோ......

சுற்றும் புவி இவன்தானோ
தட்டும் கடல் அலைதானோ
முற்றும் பகை அழிப்பானோ
மானிடன் அவன் இவனோ

சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
Come On Yeah.....
இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்
சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
சிங்கம்.....

பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்
படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்: விவேகா

20100915

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன்–ராமமூர்த்தி
படம்: புதிய பறவை
பாடல்: கவிஞர் கண்ணதாசன்

20100914

பொன்னை விரும்பும்...





பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே



பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ஆலயமணி
பாடல்: கவிஞர் கண்ணதாசன்

20100913

ஆட்டுவித்தால் யாரொருவர்



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் 
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

பாடியவர்: டி.எம்.செளந்தர்ராஜன்
படம்: அவன் தான் மனிதன்.
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடல்: கவியரசு கண்ணதாசன்.