20100315

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே ...யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே 
தூங்கும் என் உயிரை தூண்டியது 
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே 
வாசம் வரும் பூக்கள் வீசியது 
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் 
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் 
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே 


ஓ பேச சொல்கிறேன் உன்னை 
நீ ஏசி செல்கிறாய் என்னை 
வீணை தன்னையே மீட்டிக் கொண்டதா 
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும் 
வலி தந்த காயங்கள் ஆறும் 
மேற்கு சூரியன் மீண்டும் காலையில் 
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா 
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா 
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா 

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனேஓ பாதி கண்களால் தூங்கி 
என் மீதி கண்களால் ஏங்கி 
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே 
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை 
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை 
என்ற போதிலும் அந்த துன்பத்தை 
ஏற்று கொள்பவன் மேதை 
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே 

பாடியவர்கள்: சாகர், சுமங்கலி
படம்: குட்டி
இசை:தேவிஸ்ரீ பிரசாத்

0 comments:

Post a Comment