20090921

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...






பல்லவி
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா
(முகுந்தா முகுந்தா...)
வெண்ணை உண்ட வாயால் ம‌ண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா
(முகுந்தா முகுந்தா... )
என்ன செய்ய நானும் தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான்
(முகுந்தா முகுந்தா..)

குழு: ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

சரணம் 1
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்
உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதைபோலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஹே.. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா

சரணம் 2
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றங் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த் சிம்மமாகி இரணியனைக் கொன்றாய்
இராவணன் தன் தலையைக் கொய்ய இராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

(முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா)








படம்: தசாவதாரம்
பாடியவர்: சாதனா சர்கம்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா
பாடல்: வாலி

0 comments:

Post a Comment