20090922

என் நாவில் இருப்பது சரஸ்வதியே





பெண்:
என் நாவில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே
கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை
இராவனின் நெஞ்சில் காமம் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
அ அஹா அ அஹா……..
ஹா……….ஹா……….
ஆசைக்கொரு ஆளாவன்
ஆனந்தத்தின் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்
ஆடை எண்ணி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையினிலே நின்றானவன்
பூஜைக்கு வந்தானவன்
அவன் உலா உலா உலா உலா
தினம் தினம் பாரி
ஒரு விழா விழா விழா விழா
வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள்தோறுமே
கைக்கூப்பியே நான் பாடுவேன்

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா….
ஆண்:
சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை
இராவனின் நெஞ்சில் காமம் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
பெண்:
தந்தனா திந்தனானா ம்….
தந்தனா திந்தனானா ம்….
தந்தனா திந்தனானா
தில்லன்னா தில்லன்னா…..
ஆண்:
ஆசைக்கொரு ஆளாகினான்
கீதையெனும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவருக்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
திரெளபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கைக்கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா
வந்தது வீதி
திருவிழா விழா விழா விழா
ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நான் ஆகவே நான் வாழ்கிறேன்
கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் காதலித்தால்
ருக்மணியை கைப்பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பெளர்ணமியே…….

0 comments:

Post a Comment