20111103

ஏதோ ஏதோ ஒரு மயக்கம்...



ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
எங்கோ எங்கோ எது வெறுக்கும்
என் வாழ்வின் எல்லை வரையில்
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்
ராட்சசி போல் இவள்
வன்முறை செய்கிறாள்
வயதை எரிக்கிறாள்
நான் தவித்தேன் தினம்
ஐயோ ஐயோ இந்த மயக்கம்
மெய்யோ பொய்யோ எது வரைக்கும்
என் வாழ்வின் எல்லை வரையில்
தொடர்ந்திடுமா
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்


நானோ ஒரு கரை
நீயோ மறு கரை
இரு கரையும் இணைந்திடுமா
அங்கே ஒரு அலை
இங்கே ஒரு அலை
இரு அலையும் கை கோர்த்திடுமா
நீ தந்த வண்ணமெல்லாம்
நீங்காத எண்ணமெல்லாம்
நெஞ்சோடு வாழும் வரைக்கும்
உடன் வருமா
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்

தீரனனனானே னனனானே
தன்னே தன்னனானா 
ஆ ஆ ஆ ஆ
தீரனனனானே னனனானே
தன்னே தன்னனானா
தீரனனனானே தீரனனனானே
தீரனன தீரனன தீரன்னனானா

தீரனனனானே தீரனனனானே
தன்னா தன்னனானா

இன்பம் ஒருமுறை
துன்பம் மறுமுறை 
தாக்கிடுதே இது என்னமோ
ஜனனம் ஒரு முறை
மரணம் மறுமுறை
தோன்றிடுதே அடி இது என்னவோ
இது என்ன என்ன என்று
இதயத்தை கேட்டு பார்த்தேன்
அது உன்னை தேடி வந்தது
வந்து விட்டதா
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்
ராட்சசி போல் இவள்
வன்முறை செய்கிறாள்
வயதை எரிக்கிறாள்
நான் தவித்தேன் தினம்
ஐயோ ஐயோ இந்த மயக்கம்
மெய்யோ பொய்யோ எது வரைக்கும்
என் வாழ்வின் எல்லை வரையில்
தொடர்ந்திடுமா

பாடகர்கள்: ஹரிசரண்
படம்:மை 
இசை: கண்ணன்
பாடல்:நா.முத்து குமார் 

0 comments:

Post a Comment