20100412

உன் பார்வை என் மேல் ...




உன் பார்வை என் மேல் பட்டால் 
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக்கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்
உன் பார்வை என் மேல் பட்டால் 
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக்கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்

இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு விவஸ்தை
உன்னை எண்ணி தினம் புல் அரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே
விடாமல் நெஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நள்ளிரவு ஒவ்வொன்றும் முள் இரவு செய்தாயே
நுரையீரல் தேடும் ஸ்வாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
மடியில் நீ வந்தால் சௌக்கியமே
ஹேய் ஹேய் அன்பே
உன் பார்வை என் மேல் பட்டால் 
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக்கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்

சில காதல் இங்கு கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கு சில்லறைக்குள் தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லறையை ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்
மழை நாளில் நீதான் வெப்பமே
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே
உலி எதும் தீண்டா சிற்பமே ஹேய் அன்பே
உன் பார்வை என் மேல் பட்டால் 
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக்கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்

பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
படம்: சென்னை 600028
இசை: யுவன் ஷங்கர் ராஜா

20100411

உனக்குள் நானே ...



மின்னும் பனி சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்ல
***
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நாணமும் தேனல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

ஏனோ நாம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

தீப்போல் தேன்போல் சலனமே தான்
மதி என் நிம்மதி சிதையாதா
நிழலை விட்டு சென்றாயே
நினைவை விட்டு சென்றாயா
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நாணமும் தேனல்லவா

பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

20100410

வண்ண நிலவே வண்ண நிலவே ...





வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

பாடியவர்: ஹரிஹரன்
படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடல்: பழனி பாரதி

20100409

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...





ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட 
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் ஓ ஹோ ஹோ.......

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

அடியே நான் என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட 
கொடியே உன் எண்ணம் என்னவோ
கிளியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளியே என்னை கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
காதல் பார்வையில் பூமி வேறுதான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு சுகம்தான்
எனை அடிக்கடி கொடுத்து
என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
தொட்டபெட்டா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்கின்றேன்
அடி காதல் வந்து என் கண்ணாமூச்சி
நீ கண்டோ கண்டோ பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை திறக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்


பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

20100408

சுத்துதே சுத்துதே பூமி...



சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம் 
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வலைகளை நீ விரித்தாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட 
விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

இதயம் உருகித்தான் கரைந்துப்போவதைப் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
உன் அழகை விண்ணில் நிறுத்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் புதைக்கும் 

பாடியவர்: கார்த்திக், சுனிதா சாரதி
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

20100407

நான் போகிறேன் மேலே மேலே ...






நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 

கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் அய்யோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அரையினுள் நீவந்தாய்
கை நீட்டி தொட்டுபார்த்தேன் காற்றே அய்யோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தை தேடும் போர்வையாவும் சேலையாகதே 
வாராதோ அந்நாளூம் இன்றே 


என் தூக்கம் வேண்டுமென்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணமால் போனேன் பாதியில் 
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே 
கால்நோக கால்நோக நின்றேன் ஏஏஏ

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 

பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 


பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியன், K.S.சித்ரா
படம்:நாணயம்
இசை:ஜேம்ஸ்வசந்தன்

20100406

ஓன் மேல ஆசதான்...


ஓன் மேல ஆசதான்
ஆனது ஆகட்டும் Say it to me baby
போனது போகட்டும் Do it to me baby
இது கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவன் One more time yeah
கிடைத்ததை எடுப்பவன் Do it to me baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

ஓன் மேல ஆசதான்
ஆனது ஆகட்டும் Say it to me baby
போனது போகட்டும் Do it to me baby
இது கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவன் One more time yeah
கிடைத்ததை எடுப்பவன் Do it to me baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

என் எதிர ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்விதாம்ப்பா
துடிப்பான காலணிப்பா
கடல் ஏறும் கப்பலப்பா
கர தட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலையும் சாயும்
நடு சாமம் நிலவும காயும்
நேசம் நாணம் தேகம் பேய் குளித்து
தூசி போலே தொலைவீர் காண்

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோசா
பட்டுக்கிட்டு ஒட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் உளன்று
ஈசல் போல் அலைவீர் காண்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
Oh Boy Boy Boy


பாடியவர்கள்: தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், அண்ட்ரியா
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ்

20100405

பெண்ணே நீயும் பெண்ணா






பெண்ணே நீயும் பெண்ணா 
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா 
ஒவ்வொன்றும் காவியம் 
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் பொழுது தான் மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா 
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா 
ஒவ்வொன்றும் காவியம்

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பன் செல்லியும் சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா 
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா 
ஒவ்வொன்றும் காவியம்

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றதே
பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே
மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்
நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பத்திரமாய் 

பெண்ணே நீயும் பெண்ணா 
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா 
ஒவ்வொன்றும் காவியம் 
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் பொழுது தான் மொழிகள் இனிக்கிறது

பாடியவர்: ஹரிஹரன்
படம்: பிரியமான தோழி
இசை: S.A. ராஜ்குமார்.

20100404

யாரது யாரோ



யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

வார்த்தை ஒன்று வெளியேறுதே போராடுதே இது ஏனோ
பார்வை ஒன்று தீராமலே தீ மூட்டுதே இது ஏனோ
நேற்றை போலே நானில்லை ஊனுருக்கம் ஏனில்லை
காரணங்கள் வேறில்லை நீதானே
பெண்ணே நீ என்ன செய்தாய் 
பார்க்கும் போதே கைது செய்தாயே

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

போதுமென்று சொன்னாலுமே கேட்காததடி காதல்
போதுமென்று எப்போதுமே சொல்லாதடா இந்த காதல்
காதல் வந்த பின்னாலே காலிரண்டும் பின் மேலே
தாவுதடி எதனாலே கனவாலே
ஊடல் கொஞ்சம் தேடல் கொஞ்சம்
ரெண்டும் சேர்ந்து காதல் செய்வாயோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ



பாடியவர்கள்: பெல்லி ராஜ், மதுஸ்ரீ
படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்

20100403

ரகசிய கனவுகள் ஜல் ஜல்...



ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை தழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிறை போல் மனதினிலே
விழுந்தது உனது உருவம்
உதடுகளால் உன்னை படிப்பேன்
இருந்திடு அரை நிமிடம்
தொலைவது போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்

இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

மறுபடி ஒரு முறை பிறந்தேனே
விரல் தொட புருவம் சிவந்தேனே
ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

சுடும் தனிமையை உணர்ந்திட
மர நிழல் போல என்னை சூழ
நரம்புகளோடு குறும்புகள் நாளும்
எழுது என் கணக்கு
எனதிரு கைகள் தழுவிட
நீங்கும் இருதய சுலுக்கு
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை தழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிர் அணு முழுவதும் உனை பேச
இமை தொடும் நினைவுகள் அணல் வீச
நினைச்சாலே செவப்பாகும் மருதாணி தோட்டம் நீ
தலை வைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ
எனதிரவினில் கசிகிற இரவொளி நீயே படர்வாயே
நெருப்புகளாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
ஹோ... தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை தழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

குயிலே குயிலே குயிலினமே 
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே 
முகவரி எழுதி கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவு அனைத்தும்
இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே


பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ
படம்: பீமா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

20100402

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்



பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்


பாடியவர்: பென்னி தயால்
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

20100401

நீ ஒத்த சொல்லு சொல்லு....



நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா

உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா

தாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்

தாயாக மாறுகிறேன் தாலாட்டுப்பாடுகிறேன்

தானானே தானனனா தனனா நா நா நா

நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா

உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா

வெந்து காஞ்சப்பொட்டலுல வேரும் தீஞ்சு நிற்கையில
பிஞ்சுக்காலில் மழையக் கொண்டு வந்த சாமி நீதானே

அத்து வான காட்டுக்குள்ளெ நா பாறாங்கல்லா கெடக்கையிலே
கோபுரத்து உச்சியிலே என்னை ஏத்துனசாமி நீதானே

ஏ கத்தாழையும் செந்தாழயா ஆனதென்ன உன்னாலே
ஓலக்காத்தாடிதான் நெஞ்சுக்குள்ள சுத்துதடி தன்னாலே

பாய்ப்போட்டுத் தூங்கையில வாராயே கனவுக்குள்ள
என்னான்னுக் கேட்கையில நானானே நானா நானா

நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா

நீக்கொடுத்த தண்ணியில தீர்த்தம் வாசம் இருக்கும் புள்ள
உன் வார்த்தை விசிறியைப் போல வெக்கையில எனக்கு வீசுதடி

அம்மை ஊசித்தழும்புக்கூட மாஞ்சுப்போகும் உண்மையில்
அன்புக்கூட்டி நீதான் தந்த ஒத்த ஈரம் காயாதே

நீ வெள்ளக்கட்டி வச்சிருக்க தொண்டைக்குழி ஓரத்துல
உன் ஒத்த ஜடை என்னைத்தொட கேக்குறியே சாடையிலே
காதல் ஒரு சூதாட்டந்தான் கூட நின்னா ஞாயமில்லே
ஒன்னாச் சேர்ந்தாத்தாயம்புள்ள

நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா

உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா

தாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்

உறவாக வந்தவளா உயிராகச் சேர்ந்தவளா

ஆத்தா நீ சாமி போல சொல்லப்போனா அதுக்கும் மேலே


பாடியவர்கள்: ரஞ்சித், நீதா
படம்: அவள் பெயர் தமிழரசி
இசை: விஜய் அந்தோணி