நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா
உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா
தாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்
தாயாக மாறுகிறேன் தாலாட்டுப்பாடுகிறேன்
தானானே தானனனா தனனா நா நா நா
நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா
உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா
வெந்து காஞ்சப்பொட்டலுல வேரும் தீஞ்சு நிற்கையில
பிஞ்சுக்காலில் மழையக் கொண்டு வந்த சாமி நீதானே
அத்து வான காட்டுக்குள்ளெ நா பாறாங்கல்லா கெடக்கையிலே
கோபுரத்து உச்சியிலே என்னை ஏத்துனசாமி நீதானே
ஏ கத்தாழையும் செந்தாழயா ஆனதென்ன உன்னாலே
ஓலக்காத்தாடிதான் நெஞ்சுக்குள்ள சுத்துதடி தன்னாலே
பாய்ப்போட்டுத் தூங்கையில வாராயே கனவுக்குள்ள
என்னான்னுக் கேட்கையில நானானே நானா நானா
நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா
நீக்கொடுத்த தண்ணியில தீர்த்தம் வாசம் இருக்கும் புள்ள
உன் வார்த்தை விசிறியைப் போல வெக்கையில எனக்கு வீசுதடி
அம்மை ஊசித்தழும்புக்கூட மாஞ்சுப்போகும் உண்மையில்
அன்புக்கூட்டி நீதான் தந்த ஒத்த ஈரம் காயாதே
நீ வெள்ளக்கட்டி வச்சிருக்க தொண்டைக்குழி ஓரத்துல
உன் ஒத்த ஜடை என்னைத்தொட கேக்குறியே சாடையிலே
காதல் ஒரு சூதாட்டந்தான் கூட நின்னா ஞாயமில்லே
ஒன்னாச் சேர்ந்தாத்தாயம்புள்ள
நீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா
உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா
தாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்
உறவாக வந்தவளா உயிராகச் சேர்ந்தவளா
ஆத்தா நீ சாமி போல சொல்லப்போனா அதுக்கும் மேலே
பாடியவர்கள்: ரஞ்சித், நீதா
படம்: அவள் பெயர் தமிழரசி
இசை: விஜய் அந்தோணி
0 comments:
Post a Comment