Showing posts with label 7/G ரெயின்போ காலனி. Show all posts
Showing posts with label 7/G ரெயின்போ காலனி. Show all posts

20091129

நினைத்து நினைத்து பார்த்தேன் ...




நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

(நினைத்து)
பாடல்:- நா.முத்துக்குமார்
படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா