Showing posts with label எங்கேயும் காதல். Show all posts
Showing posts with label எங்கேயும் காதல். Show all posts

20110707

தீ இல்லை புகை இல்லை ...



தீ இல்லை புகை இல்லை 
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே 
நூல் இல்லை தறி இல்லை 
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
பூ இல்லை மடல் இல்லை 
புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
என்னை உன்னிடம் இழக்கிறேன் 
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓ ஓ ஓ...ஹோ...ஓ... விலையாய் தந்தேனே என்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...வாங்கிக் கொண்டேனே உன்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...ஆடை கொண்டதோ தென்னை
           
வெகு நாளாய் கேட்டேன்  
விழி தூறல் போட்டாய் 
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே 
விலகாத கையை தொட்டு 
விழியோர மையை தொட்டு 
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே 

விலக்கிய கனியை விழுங்கியது 
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா 
கண்கள் மோதாதா காதல் ஒதாதா  

தீ இல்லை புகை இல்லை 
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே  
நூல் இல்லை தறி இல்லை 
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
பூ இல்லை மடல் இல்லை 
புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
என்னை உன்னிடம் இழக்கிறேன் 
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்      

ஓ புனல்மேலே வீற்று 
பனி வாடை காற்று  
புனைந்தது நமக்கொரு புது பாட்டு 
கடற்கரை நாரை கூட்டம் 
கரைந்திங்கு ஊரை கூட்டும் 
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து 
சிலு சிலு வென்று குளிர் அடிக்க 
தொடு தொடு என்று தளிர் துடிக்க 
எனக்கொரு பார்வை நீதானே  
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா

தீ இல்லை புகை இல்லை 
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே 
நூல் இல்லை தறி இல்லை 
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
பூ இல்லை மடல் இல்லை 
புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
என்னை உன்னிடம் இழக்கிறேன் 
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓ ஓ ஓ...ஹோ...ஓ... விலையாய் தந்தேனே என்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...வாங்கிக் கொண்டேனே உன்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...ஆடை கொண்டதோ தென்னை


பாடியவர்கள்:நரேஷ் ஐயர், மகதி, கோபால் ராவ், முஹேஷ், ரானா ரெட்டி
படம்: எங்கேயும் காதல்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்.
பாடல்: வாலி.

20110629

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ




நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ 
காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே 
கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலைவேளை வேலை காட்டுதோ 
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ 
காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே 
கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வேளை வேலை காட்டுதோ 
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ 

என் நிலாவில் என் நிலாவில் 
ஒரு மின் சாரல்தான் தூவுதோ 
என் கனாவில் என் கனாவில் 
உன் பிம்பத்துகள் இன்பங்கள் பதிகையில் 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே 
கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலைவேளை வேலை காட்டுதோ 
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

ஒரு மௌனம் பரவும் 
சிறு காதல் பொழுது
கிளியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி

வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயப் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே 
கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலைவேளை வேலை காட்டுதோ 
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

பசை ஊறும் இதழும் 
பசி ஏறும் விரையும்
விரதம் முடித்து இரையை விழையும் நேரம் இது
உடலில் உறையும் உயிரில் இணையும் தூரம் அது

ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே

விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக்கோரி 
காதல்காரி துடிக்க துடிக்க

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே 
கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலைவேளை வேலை காட்டுதோ 
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ 

என் நிலாவில் என் நிலாவில் 
ஒரு மின் சாரல்தான் தூவுதோ 
என் கனாவில் என் கனாவில் 
உன் பிம்பத்துகள் இன்பங்கள் பதிகையில் 

பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
படம்: எங்கேயும் காதல்
பாடல்:மதன் கார்க்கி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்