Showing posts with label தம்பிக்கு இந்த ஊரு. Show all posts
Showing posts with label தம்பிக்கு இந்த ஊரு. Show all posts

20100319

முதல் பெண் நீயே...



முதல் பெண் நீயே
பார்த்தவுடன் கண் தானம்
செய்துவிட்டேன் அதன் பெயர்தான்
காதல் காதல்
இவள் தென்ப்பட்டால்
புன்னகையால் புண்பட்டேன்
என்னை நானே கைவிட்டேன்
ஏனோ ஏனோ
விண்மீன் மழைத்துளியாய்
என் மேல் பொழிந்தவளே
நெஞ்சம் மிதந்தேனே
உன்னாலே நானே



உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே

(முதல் பெண்...)

நீங்காதே எனை நீங்காதே
வாங்காதே உயிரை வாங்காதே
இந்த காதல் வந்தால் காகித பூவில் கூட
வண்டுகள் மொய்க்கும் மொய்க்கும்
கண்களில் தீயை வைக்கும்
ஒரு மழை மேகத்தில்
தூங்கிய தண்ணீரை போல்
நெஞ்சுக்குள் தேங்கி இரு
என் காதல் தாகம் தீரு

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே


(முதல் பெண்...)



உன் முத்தம் என் உணவாகும்
உன் கண்கள் என் கனவாகும்
எந்தன் கோபம் யாவும் 
உன்னை பார்த்தால் தீரும்
நாட்குறிப்பெல்லாம் உந்தன்
ஞாபகம் காதல் கீதம்
ஒரு உயிர் போலவே
உன்னை பூட்டிவைப்பேன்
நெஞ்சில் வாழ்ந்துவிடு
நான் உந்தன் சொந்த வீடு ஓஹோ..

(முதல் பெண்...)

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே


பாடியவர்கள்: ஜாவேட் அலி, சிந்து
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்


20100318

இன்று நான் தனி ஆள் ஆனேன்...



இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் என நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே

இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் என நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே


தாய் முகத்தை இனி நான் என்று பார்ப்பேனோ
தாய் மடியில் ஒரு தாலாட்டை கேட்பேனோ..
(இன்று...)

முதல் முதல் பேசிய அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இன்றி வாழுகின்ற வாழ்க்கை ஏனோ ஏனோ
நேற்று வரை ஆனந்தம் இன்று முதல் தீப்பந்தம்
தொப்புள் கொடி என்னை விட்டு போனது எங்கே எங்கே
தண்ணீரில் நீந்தும் மீன் போல வாழ்ந்தேன்
கண்ணீரில் இன்று நானும் விழுந்தேன்
அம்மாவின் முத்தம் வாங்காத பிள்ளை நான் மட்டும் தானா
ஏன் பிறந்தேனோ..
(இன்று...)

தாயை காண வழி இல்லை 
தாலாட்டைப்போல் மொழி இல்லை
ரத்தம் எல்லாம் கண்ணீர் துளி ஆனதென்ன என்ன
பட்டாம்பூச்சி தலை மீது பாராங்கல்லை சுமந்தேனே
கண்ணீர் மழை தீக்குச்சியை பற்ற வைத்தார் யாரோ
ரெக்கைகள் இல்லா வண்ணத்துபூச்சி 
வானத்தை பார்த்து ஏங்குதம்மா
பூக்கள் கீழே விழுந்தால் பூமாலை ஆகும்
வாழ்க்கை கீழே விழுந்தால் வழி என்னவோ..
(இன்று...)


பாடியவர்: நரேஷ் ஐயர்
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்

20100216

யாரடி நீ யாரடி ...



யாரடி 
நீ யாரடி
சொல்லடி 
நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

உன் விழி என் விழி இணைய வேண்டுமே
கைகளில் காதலை வழங்க வேண்டுமே
வறண்டு கிடக்கும் இவன் நெஞ்சிலே
துளி நீர் தெளி
ஈரங்கள் சுமந்து வரும் வான்வெளி
என் காதலி என் காதலி

போனதே உயிர் போனதே

உன் முகம் பார்த்து நான் சிவந்து போகிறேன்
உன் விழி பார்த்து நான் மயக்கம் ஆகிறேன்
மழையும் வெயிலும் இவன் கண்களில் 
தினம் பார்க்கிறேன்
புயலும் இசையும் இவன் மூச்சிலே
உண்டானதால் திண்டாடுறேன்

யாரடி 
நீ யாரடி
சொல்லடி 
நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்