Showing posts with label மாசிலாமணி. Show all posts
Showing posts with label மாசிலாமணி. Show all posts

20091217

ஓ திவ்யா திவ்யா...




ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா

ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா


எனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்
வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலை ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான்
உன் பேரை சொல்லி போகிறேன்
இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எரும்பை போல
உன் காதல் ஏந்தி செல்கிறேன்

ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா



முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே
மிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்காக திறந்தும் வைக்கிறேன்

ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா


பாடியவர்: ஷான்,
இசை: D. இமான்,
படம்: மாசிலாமணி,

20091211

டோரா டோரா ...





டோரா டோரா அன்பே டோரா
உனக்கு என்ன அழகே ஊரா
நீ என்ன பூக்களின் தேசமா

டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே
என் உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில் நிறமாற்றங்கள்
என் மேலே உண்டாகும்

உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
(டோரா டோரா..)

இது இது இது இது காதலா
என் இதயத்திலே ஒரு கூக்குரல்
அது அது அது அது காதல்தான்
என்னை தடவியதே உன் பூவிதழ்

பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய்
கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்துவாய்
இதயம் எங்கே இயங்கும் என்று
உன்னால் கண்டேன் இப்போதே
(உந்தன்..)

ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்
உன் மனதினிலே என் ஞாபகம்
சில சில சில சில நேரத்தில்
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்

யார் கண்கள் பார்த்தாலும் உன்னைப் போல் தோன்றுதே
ஐயோப்போ கிறுக்கா நீ உன் மனம் திட்டுதே
எனக்கும் கூட உனக்கு கூட
இது போல் மாற்றம் உண்டாச்சோ
(உந்தன்..)
(டோரா..)






பாடியவர்கள்: பால்ராம், கல்யாணி
படம்: மாசிலாமணி
இசை: D இமான்