Showing posts with label முந்தினம் பார்த்தேனே. Show all posts
Showing posts with label முந்தினம் பார்த்தேனே. Show all posts

20100203

பேசும் பூவே ..


பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

என் உயிரும் பூத்ததே 
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே 

பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் 
என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?

காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தே

I like your eyes
I like your smile
The way you talk
You are so inviting

மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்

முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரம் எந்திரம் போல ஆனேனே

அன்பே 
உன் சொற்களா உன் மௌனமா 
உன் மென்மையா உன் உண்மையா 
உன் உள்ளமா உன் கள்ளமா 
உன் வீரம்தான் 
எனை கொன்றதா
உன் மீசையா 
உன் தோள்களா உன் தோற்றமா 
உன் பார்வையா உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான் 
எனை தின்றதா

என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி எண்ணி
என் உலகம் ஏங்குதே

பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் 
என்னை ஈர்த்ததா?

பேசும் பூவே பூவே..பூவே..

பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா
படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: விவேகா

முதல் முறை இவன்...



முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீது நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் 
விழுந்தேன் தொலைந்தேன் 
புதிதாய் பிறந்தேன்

முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
என்னுள் ஏதோ பரவசமே
முதலெது தெரியா முடிவெது புரியா
நிலையும் மாறி உன் வசமே
சொன்னாலும் கேட்காமல் என் நெஞ்சம்
உனைச் சுற்றித் திரியும்
அதை ரசிப்பேன்
அன்பை தேடி
நான் ஏன் கால்கள் மாறிப் போனேன்
பதிலெதும் இல்லை
என்னிடம்தான்
இருந்தும் தொடர்ந்தேன்
சிறகை உணர்ந்தேன்.

இன்றே இன்றே இன்றே இன்றே
இன்றே இன்றே இன்றே இன்றே
ஒ...ஒ...
இன்றே இன்றே இன்றே இன்றே

பாடியவர்கள்: ரஞ்சித், சுசித்ரா
படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: பிரியன்