Showing posts with label வெங்கடேஸன். Show all posts
Showing posts with label வெங்கடேஸன். Show all posts

20090921

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...










குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

அனுபல்லவி [சிவ ரஞ்சினி ]

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1[சிவ ரஞ்சினி ]

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 [காபி ]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)


சரணம் 3 [காபி ]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4 [சிந்து பைரவி ]

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)

சரணம் 5 [ சிந்து பைரவி ]

குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா (3)