Showing posts with label அன்பே சிவம். Show all posts
Showing posts with label அன்பே சிவம். Show all posts

20091214

பூவாசம் புறப்படும் பெண்ணே ...





பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
(பூவாசம்..)

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட காதல் என்று ஆகுமே




ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்

என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
(பூவாசம்..)


ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது

உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது

பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது

ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்

மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...
(பூவாசம்..)



படியவர்கள்: விஜய் பிரகாஷ், சாதனா சர்கம்
படம்: அன்பே சிவம்
இசை: வித்யாசாகர்
பாடல்: வைரமுத்து

20090922

யார் யார் சிவம்?







யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்
ஆதிக்கம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்
ஆதிக்கம் வீசும் நல்லவர்க்கோ அன்பே சிவமாகும்
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்
இதயம் என்பது சக்திதான் என்றால் எரித்தால் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
அன்பின் பாதை சரிந்தவனுக்கோ முடிவே இல்லையடா
மனிதன் நிலம் எதுவோ அதுவே வாழ்வின் நிலமடா
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்………..