Showing posts with label காசி. Show all posts
Showing posts with label காசி. Show all posts

20100126

என் மன வானில்...



என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவென துள்ளி குதிக்கும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால்
உங்கள் துள்ளல் தானாய் அடங்கிவிடும்

உங்களை போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து
தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்



இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்கள் அவனே கொடுத்தான்
மனிதத்தில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே என்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மணல் நிலம் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை
இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே கட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேறென்ன வேண்டும்

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்



பொருளுக்காய் பாட்டை சொன்னார்
பொருளற்ற பாட்டே ஆகும்
வாடினேன் அதை நாடும் நானும்
பொதுவிலே பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இதுதானே
வாழ்க்கை என்னும் மேடைதனில்
நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும்
பார்வை இன்றி

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்



பாடியவர்: ஹரிஹரன்
படம்: காசி
இசை: இளையராஜா