Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

20100302

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்...





தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியே

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்



ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்ணின் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ என்ன நீ
பூவில் பூத்திருக்கும் பனியா நீ
மௌனக் கூச்சலிடும் இசையா நீ
முத்தம் சேகரிக்கும் முகமா நீ
தூண்டில் பார்வையால் தொலைந்து விட்டேன்

ஆசைமீறி அலைகள் மனசுக்குள்
மெல்ல மெல்ல வீசுதடா
ஆனால் இதழ்கள் வற்றி உள்ள
உண்மை சொல்ல கூசுதடா


தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்




கண்ணால் காதலினை மெதுவாய் சொல்
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்
சொல்லடி சொல்லடி
பாதி ராத்திரியில் விழித்தேனே
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே
ஊஞ்சல் மேகமாய் பறந்து விட்டேன்

உன் போல் இவளின் விழிக்குள்ளே
தூக்கம் தூக்கம் இல்லையடா
ஏனோ இதயம் அடிக்கடி
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியே



பாடியவர்கள்: ஹரிசரண், மாயா
படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா




20091213

போகாதே போகாதே...





போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
      போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
      உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
      கனவாய் எனை மூடுதடி
      யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
      உயிரே உயிர் போகுதடி
      கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
      உந்தன் முகம் பார்ப்பேனடி
(போகாதே போகாதே)

  கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
      அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
      நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
      நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
      உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
      உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ
(போகாதே போகாதே)


 அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
       அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
       கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
       என்வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே
       பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
       பூலோகம் இருட்டிடுதேஏஏஏ...
(போகாதே போகாதே)


பாடியவர்: யுவன்ஷங்கர் ராஜா
இசை : யுவன்ஷங்கர் ராஜா
 படம் : தீபாவளி






கண்ணன் வரும்வேளை...




கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
(கண்ணன் வரும்வேளை..)

வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
(கண்ணன் வரும்வேளை..)

பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே
(கண்ணன் வரும்வேளை...)



பாடியவர்கள்: மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா



படம்: தீபாவளி

20091201

காதல் வைத்து...




காதல் வைத்து,
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் ஐயோ தொலைந்தேன்

காதல் வைத்து,
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதேல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பாத்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்,
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்,
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்

காதல் வைத்து,
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சூழலுதடி
உன் இடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து,
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் ஐயோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் ஐயோ தொலைந்தேன்


குரல் : விஜய் யேசுதாஸ்
படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா