Showing posts with label அயன். Show all posts
Showing posts with label அயன். Show all posts

20091213

பளபளக்குற பகலா நீ...




பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூர் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு
மூட்டை கட்டி வா நீ வா நீ வா

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

இதுவரை நெஞ்சிலிருக்கும் சில
துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம் வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா



பாடியவர் : ஹரிஹரன்
படம் : அயன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்

20091209

ஓ ஆயியே...



ஓ ஆயியே யியாயியே யியாயியே
தூவும் பூமழை நெஞ்சிலே
பூவாசமே ஸ்வாசமே வாசமே
வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என்மீது மிதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான்தானா
(நீயும்..)
(ஓ ஆயியே..)

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறுகண்ணில் மறுகண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே
ஒரு கையில் ஒரு கையில் அகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்
ஊஹோஹுஹோ..
(ஓ ஆயியே..)

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உனைக்கண்டு உனைக்கண்டு ரசித்தேனே
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதை எண்ணி அதை எண்ணி இளைத்தேனே

சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே
இனி வான் இங்கே மழைச்சாரல் பூவாய்
(ஓ ஆயியே..)



பாடியவர்கள்: சின்மாயி, பென்னி டயால், ஹரிசரண்
படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்