Showing posts with label சாமுராய். Show all posts
Showing posts with label சாமுராய். Show all posts

20100409

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட 
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் ஓ ஹோ ஹோ.......

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

அடியே நான் என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட 
கொடியே உன் எண்ணம் என்னவோ
கிளியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளியே என்னை கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
காதல் பார்வையில் பூமி வேறுதான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு சுகம்தான்
எனை அடிக்கடி கொடுத்து
என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
தொட்டபெட்டா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்கின்றேன்
அடி காதல் வந்து என் கண்ணாமூச்சி
நீ கண்டோ கண்டோ பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை திறக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்